சென்னை – டிச -13,2023
Newz – webteam
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும் போதைப்பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டதோடு, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தேசிய மாணவர் படை மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்களின் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள சிறப்பு தன்னார்வலர்திட்டம்உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காவல்துறை தலைமை இயக்குநர் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்களைத் தொடங்கிவைத்து அவர்களுக்கான அடையாள பேட்ஜ்கள்வழங்கினார். இது போன்ற 50,000 அடையாள பேட்ஜ்கள் மாநிலம் முழுவதும் உள்ள போதைப்பொருள் எதிர்ப்பு குழு பொறுப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் தன்னார்வத் திட்டங்களுக்கான பிரசுரங்களையும் அமலாக்கப் பணியகம் வெளியிட்டுள்ளது. இது போன்ற 30,000 பிரசுரங்கள் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கும் NSS NCC ஒருங்கிணைப்பாளர்களுக்கும் விநியோகிக்கப்படும்.
மேலும், இன்று, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் போதை ஒழிப்புக்கு எதிராக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் காணொளியினை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வடிவமைத்துள்ளார்.
மேலும், இன்றைய நிகழ்ச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமலாக்கப் பணியகத்தினால் நடத்தப்பட்ட ரீல்ஸ் உருவாக்குதல், ரீமிக்ஸ் பாடல்கள் உருவாக்குதல் மற்றும் கானா பாடல்கள்
உருவாக்குதல் போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக காசோலையும்,
பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,அமலாக்கபணியகம் கூடுதல் இயக்குநர்,
மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., காவல்துறை அரசு உயர் அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.
போதையில்லா தமிழ்நாட்டினை உருவாக்குவதற்கான முயற்சியில்
ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மற்றும்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற டென்னிஸ் வீரர் ராம்குமார்
ராமநாதன் ஆகிய இருவரும் காணொளிகளை வெளியிட்டு இந்த சீரிய பணியில்தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளனர். இது போன்று பொது மக்களும்மற்றும் பிரபலங்களும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த
சமூக ஊடகங்களின் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான
செய்திகளை தங்களது சமூக ஊடகங்களில் வெளியிடுமாறும் அதை அமலாக்கப்
பணியகத்தின் ஊடகங்களுடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
0 Comments