தூத்துக்குடி – ஜீலை -20,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 11.10.2019 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் அவர்களின் மகனான மார்த்தாண்ட பூபதி என்பவருக்கு அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவியில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி அரசு பணியாணையை மார்த்தாண்டபூபதியிடம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி . குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன். உதவியாளர் சங்கரவேணி ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments