தூத்துக்குடி – பிப் – 21,2025
Newz – Webteam


தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பு பகுதியில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு காவல்துறையினருடன் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த RSP (Road Safety Patrol) தன்னார்வு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவிடி சிக்னல் சந்திப்பு பகுதியில் காவல்துறையினரின் போக்குவரத்து பாதுகாப்பு பணியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் இ.கா.ப திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த RSP (Road Safety Patrol) மாணவர்களின் தன்னார்வத்தையும் சேவை மனப்பான்மையையும் பாராட்டி, போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது கவனமாகவும், பிரதிபலிப்பு ஜாக்கெட் (Reflecting Jacket) அணிந்தும் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் பள்ளியிலும் கல்வியை சிறப்பாக பயின்று எதிர்காலத்தில் சாதனையாளர்களாக வர வேண்டும் என்றும் அந்த மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் இ.கா.ப உட்பட காவல்துறையினர் மற்றும் RSP அமைப்பின் பொறுப்பாளர் ஜட்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments