புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும் போலீஸ் பூத்துகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை….


திருச்சி – டிச -14,2023

Newz – webteam


திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இன்று திருச்சி மாநகரம், காவல் ஆணையகரகத்தில் நவம்‌‌‌பர்‌‌‌ மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்‌‌‌கு காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார்,வடக்‌‌‌கு.அன்பு S.தலைமையிட ரவிசந்திரன், காவல் கூடுதல் துணை ஆணையர்(ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்‌‌‌
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பேசுகையில்,
திருச்சி மாநகரில் உள்ள 50 காவலர் பூத்‌‌‌துகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும், எந்தநேரத்திலும் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்
கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்
அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும்,
திருச்சி மாநகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சுமார் CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும் எனவும், மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்,
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்
மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக
புலன்விசாரணை செய்து, எதிரிகளை கைது, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும். மேலும் முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள் , காவல்துறை இயக்குநர் அலுவலக
புகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொண்டும், அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும், வழக்கு பதிவு செய்ய முகாத்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format