அரியலூர் – ஜன 26,2024
Newz – webteam
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விரகாலூர் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக்
கடை கடந்த 14.01.2024 அன்று இரவு வியாபாரம் முடிந்ததும் மேற்பார்வையாளர் ரமேஷ் கடையினை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் 15.01.2024 அன்று மதியம் 12.00 மணியளவில் டாஸ்மாக் கடையை திறக்க வந்தபோது, டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு, 24 பெட்டிகளல் இருந்த 1152 மதுபாட்டில்கள்
திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,49,760/- ஆகும். இது தொடர்பாக, கீழப்பழூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மணடல ஐஜி M.கார்த்திகேயன் இ.கா.பா., மற்றும் திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் M.மனோகர் இ.கா.ப., வழிகாட்டுதலின் படியும், அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின் படியும், அரியலூர் உட்கோட்ட துணைக்காவல்கண்காணிப்பாளர் எம்.சங்கர் கணேஷ் மேற்பார்வையில், அரியலூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தியதில் டாஸ்மாக் கடையினுடைய பாரின் இரவு காவலாளியை தாக்கி விட்டு, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் மூவர் ஈடுபட்டது தெரிய வந்தது. தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
தளபதி ரத்தினம், தெற்கு தெரு, அம்மன்பேட்டை, திருவையாறு தாலுக்கா, தஞ்சைமாவட்டம்.
மாரிமுத்து(19) த/பெ இருளாண்டி, கிழக்கு தெரு,பெரிய பூலாம்பட்டி, பேரையூர் தாலுக்கா,மதுரை மாவட்டம் மற்றும்
எபிநேசர் (30), த/பெ பன்னீர்செல்வம், ப்ரீத்தி நகர், மணகரம்பை,தஞ்சை மாவட்டம் ஆகிய மூன்று பேரும், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து எதிரி தளபதி மற்றும் மாரிமுத்து-வை இன்று போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 672 மதுபாட்டில்கள், 480 மது பாட்டில்களை விற்பனை செய்த தொகை ரூ.67,200/-கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 அரிவாள்கள், 2 கடப்பாரைகள், மற்றும் ஒரு ஆட்டோ ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள எபினேசரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 Comments