திருப்பத்தூர் – ஆகஸ்ட் -12,2023
newz – அமீன்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் M.S. முத்துசாமி,IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு கூட்ட இறுதியில் சிறப்பாக புரிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் ஜெயலட்சுமி, காவல் ஆய்வாளர் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, குமரவேல்,காவல் உதவி ஆய்வாளர் விரல் ரேகை பிரிவு, முருகானந்தம், சிறப்பு உதவி ஆய்வாளர் வாணியம்பாடி நகர காவல் நிலையம், சரவணன், தலைமை காவலர் வாணியம்பாடி நகர காவல் நிலையம், வினித் குமார்,தலைமை காவலர் வாணியம்பாடி நகர காவல் நிலையம், பாபு ஜனார்த்தனன்,தலைமை காவலர் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, ரமேஷ் பாபு தலைமை காவலர் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, செல்வி.கனிமொழி ஏலகிரி காவல் நிலையம், சதீஷ்குமார் ஆயுதப்படை, செல்வி.தேன்மொழி ஆயுதப்படை ஆகியோருக்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துசாமி,IPS., நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.
0 Comments