சென்னை – அக் 11,2024
Newz -limton
தமிழகத்தில் சைபர் குற்றங்கள்: நிதி மோசடிகளில் 528 கோடி முடக்கம், 48 கோடி மீட்பு
சமீப காலமாக டிஜிட்டல் வணிகத்தை பயன்படுத்தி வருவோர் அதிகரித்து வருவதால், அதன் பின்னணியில் சைபர் குற்ற செயல்களும் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த சைபர் கிரைம் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலமாக குற்றவாளிகள் KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடி, டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் debit/credit கார்டு மோசடிகள் மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு பெரும் பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, சைபர் குற்றச்செயல்களில் சிக்கிய பொதுமக்கள் சுமார் ₹1116 கோடி இழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ₹528 கோடி முடக்கியதோடு, ₹48 கோடி பணத்தை மீட்டுள்ளனர்.
மேலும், சிபிஐ அதிகாரிகள் போல நடித்து மக்களை ஏமாற்றிய வழக்கில் 1 கோடி 70 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர்.
சைபர் குற்றச்செயல்கள் தொடர்பாக உடனடியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற ஹெல்ப்லைனுக்கு அழைத்தோ தகவல் அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments