திருநெல்வேலி – நவ -23,2023
newz – webteam
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் உத்திரவின்படி மாநகர நல அலுவலர் மருத்துவர் சரோஜா அவர்களின் அறிவுரையின்படி உதவி ஆணையர் (பொறுப்பு) வாசுதேவன் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில்
டெங்கு தடுப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நெல்லை டவுன்
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்றது இதில் சுகாதார அலுவலர் இளங்கோ அவர்கள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சுப்புலட்சுமி அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் சுகாதார அலுவலர் அவர்கள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசாரம் வழங்கினர்.
0 Comments