சென்னை ஆவடி – செப் -28,2023
newz – webteam


ஆய்வுப் பணியில் ஆவடி காவல் ஆணையாளர்
ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் நல்லுறவு
கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 05.09-2023அன்று நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் விதமாக 27.09.2023 ஆவடி காவல் ஆணையாளர், மீஞ்சூர் மார்கெட் பகுதியில், மக்கள் கோரிக்கையான போலீஸ் பூத் அமைப்பது, அத்திப்பட்டு பள்ளம், சோழவரம் ஏரிக்கரை பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த CCTV கேமரா பொருத்துவது, நல்லூர் சோதனைச் சாவடியில் போதிய அளவு மின் விளக்குகள் அமைத்தல், பாடியநல்லூர் பகுதியில் குற்ற தடுப்பு நடவடிக்கைகாக போலீஸ் பூத் அமைத்து கண்காணிப்பது ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் பாலவாயில் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்,
ads

0 Comments