தென்காசி – நவ -25,2023
newz – webteam
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யதால் குண்டர் சட்டத்தில் கைது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கத்தினரிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுடன் அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு (9498166566) நேரடியாக புகார் அளிக்கலாம். புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும்.. இதேபோல் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமும் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
0 Comments