
சேலம் – பிப் 24,2025
Newz – Webteam
68-வது அகில இந்திய காவல்துறை திறனாய்வு போட்டி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சியில் கடந்த 10.02.2025-ஆம் தேதி முதல் 15.02.2025-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு சார்பாக சேலம் மாநகரம், கருப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் .நவாஸ் சட்டம் மற்றும் ஒழுங்கு கலந்துகொண்டு குற்றவியல் சட்டங்கள் தேர்வில் (SCIENTIFIC AIDS TO INVESTIGATION (CRIMINAL LAWS) அகில இந்திய அளவில் வெண்கல பதக்கமும், தடய அறிவியல் திறனாய்வு தேர்வில் (FORENSIC SCIENCE WRITTEN EXAMINATION) அகில இந்திய அளவில் வெண்கல பதக்கம் என இரண்டு பதக்கங்களை பெற்று சேலம் மாநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். காவல் ஆய்வாளர் .நவாஸ் சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீண் குமார் அபினபு.இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி கெளரவித்தார்
0 Comments