

திருநெல்வேலி – மார்ச் -07,2025
Newz – Webteam
திருநெல்வேலி மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கட்டிட பணிகளுக்காக 07.03.2025ஆம் தேதி வந்த வடமாநில இளைஞர்களான உத்திரபிரதேசம், சோன் பத்ராவை சேர்ந்த அசோக்குமார்(29), மங்கர் சிங், ராஜேஷ்குமார் ஆகியோரை ஆட்சியர் அலுவலக பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் சோதனை செய்ததில், அவர்களிடம் சந்தேகத்திற்கு இடமான இலைகள் மற்றும் சுண்ணாம்பு இருந்துள்ளது. காவல் துறையினர் அவர்களை நிலையம் அழைத்து வந்து அவற்றை சோதனை செய்ததில் அவை புகையிலை பொருட்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக COTPA Act- ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி செய்திகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனை வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது என்ற செய்தி என்பது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும்.
0 Comments