இராணிப்பேட்டை – பிப் -29,2025
Newz – Webteam

டிஜிட்டல் அரெஸ்ட் ஸ்கேம் மூலம் இழந்த சுமார் ரூ 8 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு கடந்த (04.01.2025) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த சதீஷ்குமார் (வ 41) த/பெ லட்சுமணன் என்பவர் Digital Arrest Scam மூலம் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC) வழிகாட்டுதலின் படி உதவி ஆய்வாளர் தியாகராஜன் (CCPS) தலைமையிலான போலீசார் இன்று ரூ.8,00,646 பணத்தை மீட்டு சதீஷ்குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 Comments