திருநெல்வேலி – பிப் -28,2025
Newz – Webteam

சாலையில் கீழே கிடந்த பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை பாராட்டி கௌரவித்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்
திருநெல்வேலி மாநகரம் டவுண் பகுதியை சேர்ந்த தில்லை சிதம்பரம் மகன் வள்ளிநாயகம் (28) என்பவர் திருநெல்வேலி டவுண் பகுதியில் 28-02-2025 ம் தேதி, சாலையில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் கீழே கிடந்த சுமார் ரூபாய் 15,000 பணத்தை எடுத்து டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களிடத்தில் ஒப்படைத்தார். காவல் நிலையத்தில் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபரை திருநெல்வேலி மாநகர (மேற்கு) காவல் துணை ஆணையர் கீதா . நேரில் அழைத்து நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்
தவற விட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் டவுண் காவல் நிலையத்தை அணுகுமாறு திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments