
தஞ்சாவூர் – மார்ச் – 01,2025
Newz – Webteam
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் திடீரென வலிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த நபரை பணியில் இருந்த தமிழ்நாடு
சிறப்பு காவல் படை காவலர்கள் மீட்டனர்
கடந்த 23.02.2025 அன்று, கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பேட்டை எனும் இடத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றத தமிழ் நாடு பேரிடர் மீட்புப்படை. சிறப்பு காவல் படை 13-ஆம் அணியை சேர்ந்த.காவலர் விஜய், காவலர் அய்யனார்.காவலர் அருண் குமார்.
ஆகியோர் கும்பகோணம் வளையப்பேட்டையில் உள்ள தாராசுரம் யு-டர்ன் பார்க்கிங் பகுதி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒருவருக்கு திடிரென வலிப்பு ஏற்பட்டதைக் கண்டு உடனடியாக மேற்கண்ட 3 காவலர்களும் விரைவாகச் செயல்பட்டு அந்த நபருக்கு உடனடி முதலுதவி அளித்தனர்.
அவர்களின் விரைவான செயல்பாட்டால் அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பினார், மேலும் பொதுக் கூட்டத்திற்கு அவருடன் வந்த அவரது உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
மூன்று காவலர்களும் மீட்பு மற்றும் முதலுதவி வழங்குவதற்காக பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
அவர்களின் விரைவான செயல்பாட்டாலும், முதலுதவி அளித்ததாலும் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. காவல்துறையினரின் செயல்திறன் பொதுமக்களாலும், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
மேற்படி காவல்துறை ஆளினர்களின் முன் மாதிரியான அர்பணிப்பு, துணிச்சல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான அர்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் இன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்
0 Comments