திருப்பத்தூர் -ஜீன் 16,2024
Newz -webteam
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையமுத்தூர், கோனேரிகுப்பம், பொம்மியகுப்பம், கொடுமாம்பள்ளி, தண்ணீர்பந்தல் மற்றும் மாடப்பள்ளி ஆகிய இடங்களில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது
அவைகளில் கடந்த சில தினங்களாக உபகரணங்கள் (RRU மற்றும் Batterys) போன்ற சில பொருட்கள் காணாமல் போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது.
தனிபடை CCTV கேமராக்கள் தொழில்நுட்ப உதவிகளுடன் விசாரணை செய்யப்பட்டதில் குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள 1.சம்பத் -29 பொம்மியகுப்பம், 2.பெருமாள்-28 பொம்மியகுப்பம், 3.விஜயகுமார்-32 பொம்மியகுப்பம், 4.சந்துரு-35 நாட்றம்பள்ளி, 5.பெருமாள் – 27 நாட்றம்பள்ளி, 6.புஷ்பராஜ் – 24 நாட்றம்பள்ளி மற்றும் 7.தினேஷ்- 24 நாட்றம்பள்ளி ஆகிய நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 8.தானேஷ்-34 என்ற நபரிடம் திருடப்பட்ட பொருட்களை கொடுக்கப்படுவதாகவும் அப்பொருட்களை தானேஷ் வெளி மாநிலங்களில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து எதிரி தானேஷை கைது செய்து அவரிடம் இருந்து திருடு போன உபகரணங்கள் RRU (REMOTE RADIO UNITS) மற்றும் Batterys ஆகிவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்
0 Comments